Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் உலகில் தமது உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் தொகை வரலாற்றிலேயே மிக அதிகம் என்றும் ஆனால் இப்பிரச்சினையை இயன்றளவு சமாளிக்க உலக நாடுகள் சில நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்று புதன்கிழமை நோர்வே அகதிகள் கவுன்சில் அறிவித்துள்ளது.

இது குறித்து அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறித்த கவுன்சிலின் பாதுகாப்புச் செயலாளர் ஜான் எகெலன்ட் தகவல் அளித்தார்.

இதன்போது அவர், உலகில் கடந்த வருடம் ஒவ்வொரு நாளும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சராசரியாக சுமார் 30 000 பேர் உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறைகள் காரணமாக இடம்பெயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில் கடந்த வருடம் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் தொகை 11 மில்லியனில் இருந்து வரலாற்றில் இல்லாதளவுக்கு 38 மில்லியனாக உயர்ந்திருப்பதாகவும் இந்த எண்ணிக்கையில் வெளிநாட்டுக்குச் சென்ற அகதிகள் அடங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்ததுடன் மேலும் இன்று இடம் பெயர்ந்தவர்களில் பலர் தான் நாளைய அகதிகள் ஆகுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை 2014 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த மொத்த மக்கள் தொகை குறித்த கணக்கீட்டை ஐ.நா இன் அகதிகள் ஏஜன்சியான UNHCR இன்னமும் உத்தியோகபூர்வமாகத் தயார் படுத்தவில்லை என்ற போதும் 2013 இறுதிக்குள் இத்தொகை 16.7 மில்லியனாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.

ஐ.நா இன் முன்னால் மனித உரிமை அதிகாரியான எகெலன்ட் அகதிகள் குறித்த தனது ஆய்வினை முக்கிய 60 நாடுகளில் விஸ்தீரணப் படுத்தியிருந்தார். இவரது முடிவின் படி 2014 ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் 10 இல் 6 பேர் ஈராக், தென் சூடான், சிரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. முதலிடத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொகை 7.6 மில்லியன் மற்றும் அகதிகள் 4 மில்லியன் தொகையுடன் சிரியா திகழ்ந்து வருகின்றது.

0 Responses to உலகில் ஒவ்வொரு நாளும் 30 000 பேர் வதிவிடங்களை விட்டு வெளியேறுகின்றனர்!: அகதிகள் கவுன்சில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com