Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சல்மான் கான் சிறை செல்ல மாட்டார் என்று தாம் நம்புவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான் கானுக்கு கடந்த 2002ம் ஆண்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, இந்த விபத்தில் ஒரு உயிர் பலியானது மற்றும் 4 பேர் படுகாயமடையச் செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றும், இந்த தண்டனைகள் 8 குற்றங்களின் கீழ் வழங்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சல்மான்கான் தரப்பு வழக்கறிஞர் சல்மானுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஜாமீன் கேட்டதால் தற்போது சல்மான்கான் 48 மணி நேர ஜாமீனில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஜாமீன் கேட்டு சல்மான் கான் தரப்பு விண்ணப்பித்து உள்ளதால் சல்மான்கான் வழக்கின் முழுத் தீர்ப்பு வெளியாகும்வரை சிறை செல்ல மாட்டார் என்று தமக்கு நம்பிக்கை உள்ளது என்று சல்மான்கான் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சல்மானுக்கு அவசர கதியில் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், மேலும் சல்மானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஒருவர் மும்பை நீதிமன்றத்தில் மனுத் தொடுத்து உள்ளார் என்றும் தெரிகிறது.

0 Responses to சல்மான் கான் சிறை செல்ல மாட்டார்? - வழக்கறிஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com