ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள மோசுல் நகரில் ISIS போராளிகள் ஜிஹாதிஸ்ட் தளபதிகளுக்காக 262 அறைகளுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சமீபத்தில் திறந்திருப்பதாகப் பரபரப்புச் செய்தி சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை குறித்த 5 ஸ்டார் ஹோட்டல் 262 அறைகளுடன் இரு உணவு விடுதிகள், இரு பால் ரூம்கள் மற்றும் ஓர் ஜிம்னாசியத்துடனும் ஏனைய வசதிகளுடனும் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறித்த ஹோட்டல் ISIS ஆல் கைப்பற்றப் பட முன் நினாவா சர்வதேச ஹோட்டல் என்ற பெயரில் இயங்கி வந்ததாகத் தற்போது அடையாளம் காணப் பட்டுள்ளது. மேலும் இந்த ஹோட்டல் கட்டடத் தொகுதி கைப்பற்றப் பட்ட பின்னர் ISIS போராளிகளால் பூங்காவனம் அமைக்கப் பட்டும், சுவர்கள் வண்ணம் தீட்டப் பட்டும், யன்னல்கள் துப்பரவாக்கப் பட்டும் ஏற்கனவே அமைக்கப் பட்டிருந்த நீச்சல் குளங்கள் புனரமைக்கப் பட்டும் திறக்கப் பட்டுள்ளதுடன் பல அடுக்கு மாடிக் கட்டடத் தொகுதியான இந்த ஹோட்டலின் முன்னால் இரு கருப்பு நிற ISIS கொடிகள் பறக்க விடப் பட்டும் உள்ளதாக சமூக வலைத் தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மே 1 ஆம் திகதி இரவு ISIS போராளிகள் இந்த ஹோட்டலைத் திறந்ததுடன் அன்றைய தினம் தமது ஆதரவாளர்கள் இலவசமாக ஹோட்டலைப் பார்வையிடவும் உணவருந்தவும் அனுமதித்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழா குறித்த புகைப் படங்களும் கூட இணையத்தில் சில சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஈராக்கில் ISIS பிடியில் இருக்கும் மோசுல் நகரம் அந்நாட்டின் 2 ஆவது பெரிய நகரம் என்பதுடன் பொருளாதார ரீதியிலும் ஈராக் அரசுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக்கில் ஜிஹாதிஸ்ட் தளபதிகளுக்காக 5 ஸ்டார் ஹோட்டல் திறந்ததா ISIS?