கடந்த வாரம் ரஷ்யாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட ஆளில்லா கார்கோ விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றது.
இது இன்னும் சில மணி நேரங்களில் அதாவது வெள்ளிக்கிழமைக்குள் பூமியில் வீழ்வதாகவும் ஆனால் தரையைத் தொட முன்பே குறித்த விண்கலம் வளிமண்டல உரசலினால் முற்றாக எரிந்து விடும் என்பதால் ஆபத்து எதுவும் இல்லை எனவும் ரஷ்ய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக், அதிகளவு சேதத்தை விளைவிக்கும் தன்மையற்ற குறித்த விண்கலத்தில் எரியாது மிஞ்சும் சிறிய உலோகப் பாகங்கள் பூமியில் விழ வாய்ப்பு இருப்பதாகவும் இவை எங்கு விழும் என்பதைச் சரியாகக் கணித்து விரைவில் தெரிவிப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான றொஸ்கொஸ்மொஸ் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஏப்பிரல் 28 ஆம் திகதி ஏவப்பட்ட Progress 59 என்ற குறித்த விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடமான ISS உடன் இணைவதற்குத் திட்டமிடப் பட்டிருந்த போதும் ரஷ்யத் தரைக் கட்டுப்பாட்டாளர்கள் அதனுடனான தமது கட்டுப்பாட்டை உடனே இழந்துள்ளனர்.
நாசாவின் தகவல் படி குறித்த கார்கோ விண்கலம் சுமார் 3 டன் எடையுடைய விண்வெளி வீரர்களுக்கான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் ஆய்வு கூடத்துக்குத் தேவையான திருத்தும் பாகங்கள், விஞ்ஞானப் பரிசோதனை உபகரணங்கள் மட்டுமன்றி எரிபொருளையும் காவிச் சென்றிருந்ததாகவும் ஆனால் இந்தப் பொருட்களில் எதுவுமே ISS வீரர்களுக்கு உடனடித் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அல்ல எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் றொஸ்கொஸ்மஸ் நிலையம் கட்டுப்பாட்டை இழந்திருக்கா விட்டாலும் தனது பொருட்களை ISS இற்கு வழங்கி விட்டு பூமியில் வீழ்வதற்கே Progress 59 இன் செயற்பாடு திட்டமிடப் பட்டும் இருந்தது. இந்நிலையில் ISS இற்கான சப்ளையை வழங்கும் அடுத்த விண்கலம் ஜூன் 19 இற்குப் பின்னரே விண்ணில் செலுத்தப் படும் என நாசா அறிவித்துள்ளது.

0 Responses to ரஷ்ய கார்கோ விண்கலம் பூமியில் வீழ்கின்றது!: முற்றாக எரிந்து விடும் என விஞ்ஞானிகள் தகவல்