Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் 5000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுவரை நூறு கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழல் மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 60 முறைப்பாடுகளில் 08இற்கும் அதிகமான முறைப்பாடுகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளில் அநேகமானவை 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஊழல் மோசடிகளாகும். இவற்றுடன் பெரும்பாலும் அரசியல்வாதிகளே தொடர்புபட்டுள்ளனர். அமைச்சு செயலாளர்கள், அரச அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.

தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறைப்பாட்டினையும் மிகவும் நுணுக்கமான முறையில் ஆராய்ந்து வருவதாகவும் இதற்காக அதிக நேரம் அர்ப்பணிப்புடன் செலவிடப்படுவதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

அநேகமான தனிநபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவையென்பது விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இவ்வாறு குற்றம் உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரிடம் இறுதி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரச அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் விளைவாக ஆயிரம் கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி பல கோடி ரூபாவினை வருமானமாக பெற்ற நபர்கள் வருமான வரி திணைக்களத்திற்கு வரி செலுத்த தவறியுள்ள விபரம் தொடர்பில் தனியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 Responses to நிதி மோசடி விசாரணை பிரிவின் இதுவரையான விசாரணைகளில் 5000 கோடி ரூபாய் மோசடி அம்பலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com