ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து யாரும் விலகலாம். அது, அவரவர் விரும்பம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான டிலான் பெரேரா, சி.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் இன்று வியாழக்கிழமை பதவி விலகினர். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நான்கு அமைச்சர்களின் பதவி விலகலானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுவதாகவும், எதுஎவ்வாறு இருப்பினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அல்லது அதன் உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட தனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் அஜித் பீ பெரேரா கூறியுள்ளார்.
எது எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி முழு மனதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மைத்திரி அரசிலிருந்து யாரும் விலகலாம்; அது அவரவர் விருப்பம்: அஜித் பீ பெரேரா