மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவா சென்று முறையிடுவது தேசத்துரோகம் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், இப்போது ஊழல் மோசடி விசாரணைக்கு எதிராக ஜெனீவா சென்று முறையிடுவது தேசத்துரோகம் இல்லையா?, என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொலிஸ் அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஊழல் மோசடிகள் எனும் பெயர் கைது செய்து சிறையில் அடைக்க முயல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி உறுப்பினருமான பந்துல குணவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டு மக்களின் ஆணையின் பிரகாரம் பாராளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்படும் என்றும் இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த குழுவினர் ஜெனீவாவுக்கு செல்வது தேசத்துரோகம் இல்லையா?; ஐ.தே.க கேள்வி!