வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெற்றுள்ள காடழிப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்பொருட்டு அமைச்சு மட்டத்திலான குழுவொன்று வில்பத்து சரணாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
காடழிப்பு தொடர்பில் ஆராய்ந்த பின்னர், அதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காடழிப்பில் ஈடுபட்ட சகலர் மீதும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு!