Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் தொண்டர்களின் உற்சாகக் கொண்டாட்டத்தால் பரபரப்பாகி உள்ளது சென்னை மாநகரம்.

இன்று கூடிய அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஒ.பன்னீர் செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநர் ஜெயலலிதாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள ஜெயலலிதா, கிண்டி ஆளுனர் மாளிகையில் ஆளுனரை சந்தித்து, அமைச்சர்கள் பட்டியலை வழங்கி ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவிப்பார் என்று தெரிய வருகிறது.

நாளை காலை சென்னை எழிலகம் அருகில் உள்ள நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் ஜெயலலிதா, 5 வது முறையாகப் பதவி ஏற்க உள்ளார். இதனால் சென்னை மாநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று காலை முதலே ஆரம்பமாகி உள்ளது.

வெளியூரில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்து வருவதால், சென்னை நகரம் மக்கள் நெருக்கடியில் சிக்கி உள்ளது. தொண்டர்களின் உற்சாகத்தால் சென்னையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

0 Responses to ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் பரபரப்பாகி உள்ளது சென்னை மாநகரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com