ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி குமாரசாமி தனது உதவியாளர்களுடன் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது
மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல், கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக் கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின் போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

0 Responses to தீர்ப்பை திருத்த முடியாது! ஜெயலலிதா பதவியேற்க தடை இல்லை!