வெளிநாடு சென்றுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றில் ஆஜராகாது இருந்த நிலையிலேயே, ஞானசார தேரர் மீது இவ்வாறான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும், ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு!