Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொலிஸ் நிதி மோசடி பிரிவு உள்ளிட்ட சட்டத்தை அமுலாக்கும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் இல்லை என தலைப்பிட்டு பிரதமர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு குறித்து அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிதி மோசடி அதிகரித்துள்ளதால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55வது பிரிவின் கீழ் அமைச்சரவை அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரின் பூரண கண்காணிப்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவு இயங்கி வருகின்றது. பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இவ்வாறு 64 பிரிவுகள் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்கு உள்ள அதிகாரங்களைத் தவிர மேலதிக அதிகாரங்கள் எதுவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வழங்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சட்டத்தை அமுலாக்கும் எந்தப் பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை: பிரதமர் அலுவலகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com