கேரள காவல்துறை தேடிக்கொண்டிருந்த ஒரு தம்பதியினர் உள்ளிட்ட 4 மாவோயிஸ்ட்கள் கோவையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரள காவல்துறை கடந்த சில மாதங்களாக தேடிவந்த மாவோயிஸ்ட் தம்பதியரோடு மேலும் இரண்டு மாவோயிஸ்ட்கள் கோவையில் யாருக்கும் தெரியாமல் ஒரு குடும்பமாகத் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.இதை தமிழகப் போலீசார் மோப்பம் பிடித்துக் கைது செய்துள்ளனர்.கைது செய்து விசாரிக்கும் வரை அவர்கள் கேரள போலீசாரால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்கள் என்று தமிழக போலீசாருக்குத் தெரியாது என்று கூறப்படுகிறது.
கைது செய்தவர்களின் செல்போனில் 500மேற்பட்ட தொடர்பு எண்கள் உள்ளன என்றும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.இதனால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to கேரள காவல்துறை தேடிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் தம்பதி கோவையில் கைது!