யார் இந்த அருண் தம்பிமுத்து. இவர் தான் மகிந்தரின் தமிழ் அட்வைசர் (ஆலோசனை வழங்குபவர்). சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர். மேலும் சொல்லப்போனால், ஒரு தடவை லண்டனுக்கு வந்து இங்கே சனல் 4 ஊடகவியலாளர்களோடு நடந்த ஒரு வாதத்தில் கலந்துகொண்டு இலங்கை அரசை தூய்மையானவர்கள் என்று பேசி கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தியவர் இந்த அருண் தம்பி முத்து. ஆகமொத்தம் இவர் மகிந்தரின் ஒரு அடி வருடி. இனி நடந்தது என்ன என்று பார்கலாம். இவரை நேற்று முன் தினம் பொலிசார் கைதுசெய்து பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளார்கள். மகிந்தர் ஒருபக்கம் மோசடி என்றால் இவர் காசோலைகளை கொடுத்து பெரும் மோசடி செய்துள்ளார்.
மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக 3 வழக்குகள் உள்ளது. ஒப்பந்தகாரர் வி.றஞ்சிதமூர்த்தி தன்னிடம் 20 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை (செக் பவுன்ஸாகி இருக்கு) எனவும் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நூர்தீன் என்பவரின் காணியை 45 இலட்சம் ரூபாவுக்;கு வாங்கிவிட்டுக் கொடுத்த 45 இலட்சம் ரூபாவுக்கான காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா முகமது சஜீத் என்பவரிடம் காணியினை 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாங்கிவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் காசு வங்கியில் இல்லை என்று தெரிந்தும், செக்கை எழுதிக் கொடுத்து காணி மற்றும் பணத்தை சுருட்டியுள்ளார் இந்த அருண் தம்பிமுத்து. இது இவ்வாறு இருக்க தமிழர்கள் சர்வதேச அரசியலில் இறங்கவேண்டும்! தமிழர்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று இவர் அடிக்கடி கட்டுரைகளை எழுதி இணையங்களுக்கு அனுப்ப சில கேணைத்தனமான இணையங்கள் இவர் கட்டுரைகளை பிரசுரிப்பதும் உண்டு. இவர் மகிந்தவின் கையாள் என்று தெரிந்தும் கூட பிரபலமான சில இணையங்கள் இவர் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்தும் வந்துள்ளது. ஆனால் இவர் கைதான செய்தியை மட்டும் மறைத்துவிட்டார்களப்பா!

0 Responses to அட்வைசர் அருண் தம்பி ஆட்டையைப் போட்டது எப்படி?