Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை, காலை 08.00 மணி) இலங்கையை வந்தடைந்தார்.

35 பேரடங்கிய தூதுக்குழுவுடன் தனி விமானத்தில் வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை, கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.

ஜோன் கெரியின் முதலாவது இலங்கை விஜயமாகவும், 2005 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் இந்த நாட்டிற்கு மேற்கொள்கின்ற முதலாவது பயணமாகவும் இது அமைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் தனது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் மக்கள் மத்தியில் சுபீட்சம் நிலவுவதற்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை ஜோன் கெரி வெளிப்படுத்துவார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின்போது வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

0 Responses to அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கையை வந்தடைந்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com