மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரும் வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலேயே விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரும் கோரிக்கை; மைத்திரி பதிலளிக்கவில்லை!