Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திவிநெகும திணைக்களத்தில் நிதி மோடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதிமன்றத்தில் குறித்த நால்வரும் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, நீதவான் எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பஷில் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com