பொருளாதார வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும்,பல்கலைக்கழக பேராசிரியர் பணியை மேற்கொள்ள உள்ளார்.
பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் ஜவகர்லால் நேரு இருக்கையில் பொருளாதாரத் துறையின் தலைவர் பதவியை அவர் வகிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டே பேராசிரியர் பணியை ஏற்று மாணவர்களுக்கு பொருளாதாரம் பற்றி பாடம் நடத்த மன்மோகன்சிங் திட்டமிட்டார். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல். ஏ.க்கள் ஆதாயம் தரும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனால் பேராசிரியர் பணியை ஏற்க மன்மோன்சிங் ஆலோசித்து வந்தார்.
பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்றால், அது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யும் சட்டப் பிரிவுக்குள் வருமா? என்று அவர் மத்திய அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்டார். அதன் பேரில் இது தொடர்பாக பாராளுமன்ற குழு கூடி விவாதித்தது.அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்கலாம். அது ஆதாயம் தரும் பணியில் வராது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து மன்மோகன் சிங் பேராசிரியராக பணியாற்ற தடை இல்லை என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.மத்திய சட்ட அமைச்சகம், மத்திய மனிதவள அமைச்சகமும் மன்மோகன்சிங் பேராசிரியராக பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளன.எனவே அவர் விரைவில் கவுரவ பேராசிரியர் பொறுப்பை ஏற்பார். அவருக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதில் தினசரி படியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த மன்மோகன் சிங் 1954-ல் பட்டம் பெற்றார். பிறகு 1957-ல் அதே பல்கலைக் கழகத்தில் மூத்த லெக்சரராக சேர்ந்தார். 1963-ம் ஆண்டு முதல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.பொருளாதாரம் குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ள அவரை மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசியலுக்கு அழைத்து வந்து நிதி அமைச்சர் ஆக்கினார். அதைதொடர்ந்து மன்மோகன்சிங் பிரதமரானது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மீண்டும் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்!