புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? அவங்கள் இருந்தால் இவங்களை விட்டிருப்பாங்களா?? றோட்டில வைத்து மரணதண்டனை நடந்திருக்கும்!!
சாகமாட்டோம் என்ற துணிவில் இப்போது எல்லா ரவுடிகளும் கேவலமான செயலுகள் செய்கிறாங்கள்!! அவங்கள் இருந்த நேரம் ஒரு வாள் வெட்டு சம்பவம் நடந்திருக்குமா?? வீடு புகுந்து களவெடுத்திருப்பாங்களா? என அனைவரது மனத்திலும் விடுதலைப்புலிகளின் நினைவை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளாள் வித்தியா!
முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுகளை விட வித்தியாவின் கொடூர கற்பழிப்பு நிகழ்வினாலேயயே புலிகளை நினைத்து தற்போது அனைத்து தமிழ்மக்களும் உணர்ச்சியுடன் நினைத்து உருகுகின்றார்கள். வீட்டில் பொறுப்பு வாய்ந்த குடும்பத் தலைவன் இல்லாதது போல், வீரம் மிக்க சொந்த அண்ணன் இல்லாதது போல், துணிச்சலுடன் எதிரியைத் தாக்கும் நெருங்கிய சினேகிதன் இல்லாதது போல் அனைவரது மனத்திலும் புலிகளின் நினைவு தற்போது பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
சிங்களவனுடன் போராடுவதிலும் பார்க்க தற்போது எமது சமூகத்துக்குள்ளேயே இருக்கும் கொடூரமானவர்களுடன் போராட்டம் நடாத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தமிழ் இளைஞர்களது இதயங்கள் இதனை மனத்தில் கருக்கொண்டு சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டிய காலம் நெருங்கியுள்ளதை உணரவேண்டியவர்களாக உள்ளார்கள்.
சட்டத்தரணிகள் கொலையாளிகளுக்கு ஆதரவாக வாதிடக்கூடாது என யாழ் பல்கலைக்கழக சமூகம் எடுத்த நடவடிக்கை அவற்றில் முக்கியமான ஒன்றாக உள்ளது. மனத்தில் வைத்திருக்கும் ஆக்ரோசத்தை செயலில் காட்டுங்கள் தோழர்களே!!
அந்நியன்
0 Responses to புலிகளின் பெயரை உச்சரிக்க செய்த வித்தியாவின் சம்பவம்!