Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனாலும், அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சந்திரநேரு சந்திரகாந்தன் இறுதி மோதல்களின் பரபரப்பான நிமிடங்கள் பற்றி தன்னுடைய அனுவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் தீர்மானத்துக்கு வந்து, அந்த விடயத்தை சர்வதேசத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் அறிவிக்கும் பொறுப்பை பா.நடேசனுக்கு ஊடக தன்னிடம் வழங்கியதாகவும் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளையும், பொதுமக்களையும் உயிர்ச் சேதங்கள் இன்றி சரணடைய வைப்பதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் பஷில் ராஜபக்ஷவுடன் தான் தொடர்புகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் பேசியதாகவும், அதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் தொலைபேசியில் உரையாடி சரணடைபவர்களின் உயிருக்கான உத்தரவாதத்தை தன்னிடம் வழங்கியதாகவும் சந்திரகாந்தன் சந்திரநேரு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதனை நம்பி சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் நம்பிக்கைத் துரோகம் செய்து சுட்டுக் கொன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


0 Responses to சரணடைந்த புலிகளை இராணுவம் தேநீர் கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றது: சந்திரநேரு சந்திரகாந்தன் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com