நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவுப் .பிறப்பித்துள்ளது.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து, சல்மானுக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சல்மான் கான் வழக்கின் மீதான தீர்ப்பு வெளியானது. இவ்வழக்கில் சல்மான் குற்றவாளிதான் என்று உறுதிப் படுத்தப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் உடனடியாக மும்பை உயர் நீதிமன்றம் 48 மணி நேர ஜாமீன் வழங்கியது.இதையடுத்து இப்போது தொடர் ஜாமீனும் வழங்கி, கூடவே தண்டனைக்கும் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது

0 Responses to சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை: மும்பை உயர் நீதிமன்றம்