எதிர்க்கட்சிகள் வேறுபாடின்றி இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று காலை இ.வி.கே.எஸ்.இளங்கோவனை அவரது இல்லத்தில் சென்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது , ஸ்டாலின் தமது தம்பி மகன் அருள் நிதியின் திருமணப் பத்திரிகையை இளங்கோவனிடம் கொடுக்கவே அவரை அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனை செய்தியாளர்கள் சந்தித்து திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்று கேள்வி எழுப்பினர்.
உங்களது கற்பனைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று கூறிய இளங்கோவன், ஆனால் எதிர்க்கட்சிகள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும், ஆளும் கட்சியின் ஊழல்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to எதிர்க்கட்சிகள் வேறுபாடின்றி இணைய வேண்டும்: இளங்கோவன்