Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நிலம் கையக்கபடுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மேற்குவங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தார் மம்தா பானர்ஜி.அப்போது, நிலம் கையக்கப்டுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எங்களது நிலையைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இப்படிப்பட்ட சூழலில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

எந்த அடிப்படையில் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறது என்றும் புரியவில்லை என்று கூறியுள்ள மம்தா, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கூறியுள்ளார்.

0 Responses to நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை: மம்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com