Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனவரி 8ஆம் திகதி வரை மகிந்த ராஜபக்ச நடந்து கொண்ட ஆணவ அதிகார தோரணை, சகோரதத்துவம் ஒற்றுமை, ஊழல் ,கொலை ,கொள்ளை குடும்ப ராஜசுபபோகம், அம்மம்மா ஓர் நாட்டின் தலைவரானால் இப்படியா இவ்வளவுமா என மக்கள் பார்த்துக்கொண்டிருந்த அந்த ராஜபக்சவின் கடந்த காலத்தை நாம் சற்று பின்நோக்கி பார்த்தோமேயானால்,

மகிந்த ராஜபக்சவின் உண்மையான பெயர் பேர்சி மகேந்திர ராஜபக்ச ,இந்தப் பெயரே பாராளுமன்றத்தின் அறிக்கையிலும் ,அவர் அமைச்சரான போதும் இருந்துள்ளது இதை பாராளுமன்ற பதிவேடுகளில் இன்றும் காணலாம்.

பேர்சி என்ற பெயரை மகேந்திர ராஜபக்ச பாவிப்பது கிடையாது 8 சகோதர, சகோதரிகளுடன் பிறந்த இவரின் தந்தையாரின் பெயர் டொன் அல்விஸ் ராஜபக்ச ஆகும்.

தென் பகுதி பௌத்த குடும்பத்தில் பிறந்த போதும் வசதி வாய்ப்பு என்ற போது சகல கலாச்சார மத மரபுகளை ஒதுக்கிய பரம்பரையே இந்த ராஜபக்ச குடும்பம் பேராசை வரும் போது வசதி வாய்ப்புக்கே முதலிடம்.

இதன் அடிப்படையிலேயே இந்த மகேந்திர ராஜபக்சவின் பாட்டன் தந்தை போர்த்துகேயரின் பெயரில் தங்களின் வாழ்விற்காக அடிமையானாவர்கள். இது சிங்கள இனத்திற்கு மாத்திரம் இல்லை தமிழ் இனம் என கூறும் வடக்கு கிழக்கு, மலையகம் என்ற தமிழ் இனத்திற்கு ஏற்றதாகும். இது பசி என்பவருக்கு உணவு கிடைத்தால் அதற்கு நன்றி தெரிவிப்பதற்கு ஒப்பானது.

ராஜபக்ச என்பவர்கள் யார்? இவர்கள் ராஜ்ஜியத்திற்கு விசுவாசமானவர்கள் இவர்கள் ராஜ்ஜியத்திற்கு பாதுகாக்க இருந்த இனம் இவர்கள் ஆளுபவர்கள் அனுபவிப்பதை பார்த்து ஏங்கிய சமூகம் இவர்களுக்கு கனவு அதீத வேகமாக இருக்கும் உள்ளே இருப்பவர்கள் நிம்மதியாக உறங்கினாலும் இவர்கள் உறங்க முடியாது ஏன் என்றால் இவர்களின் கடமை பாதுகாப்பு ஆகவே உள்ளே அப்படி இருப்பாரோ அல்லது இப்படி இருப்பரோ என்ற கனவுடன் வெளியில் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாது ஏங்கியவர்கள்.

கற்பனை உலகில் சஞ்சாரத்துடன் வாழ்ந்துகொண்டு கடமையை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தவர்கள் இந்நிலையில் ஏன் எமது குடும்பம் சுபபோகத்துடன் இருக்க கூடாது என்ற அடி மனதில் ஏக்கம் எண்ணம் கற்பனை, நோக்கம் அடைய வேண்டிய வழி முறைகள் என சிந்தித்துக்கொண்டு இருப்பவனே ராஜியத்தின் பக்கத்தை சார்ந்தவன் இதை சிங்கள மொழியில் ”ராஜபக்ச” என கூறுவார்கள் ( உண்மையான அர்த்தம் ராஜபக்ச என்பது ஆட்சியாளரின் பக்கம் என்பதே).

ஆகவே இவர்களை என்றும் எப்பொழுதும் விசுவாசி என நினைக்க கூடாது மற்றவர்கள் அனுபவிப்பதை அனுபவிக்க முடியாத சாபகேடுகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகம் என கருதலாம்.

ஆகவே இவர்களின் எண்ணம் எப்பொழுதும் வெறி ,அழிப்பு, அதன் மூலம் சகலவற்றையும் அடைய வேண்டும் என்ற எண்ணமாகும் ஆனால் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கும் பொறுமையுடையவர்கள் ஆகும். அதுவே இந்த மகேந்திர ராஜபக்சவின் எண்ணமாகும்.

பாதுகாத்துக் கொண்டு இருப்பவர்கள் செயல்படும் அல்லது அனுபவிப்பதை பார்த்து ஏங்கும், அல்லது ஏங்கிக்கொண்டு கற்பனையில் வாழும் அந்த பாதுகாவலனில் எண்ணங்களில் சிறகடிக்க கற்பனைக்கு எல்லையில்லை என்பதே யாதார்த்தமாகும். இந்த பரிதாப நிலையே இந்த ராஜபக்ச குடும்ப வம்சத்தினருக்கும் ஏற்பட்டிருந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

காக்கும் கடவுளுக்கு என்றுமே கோபுரத்துடன் கோயில் இல்லை அவர்கள் என்றும் மரத்தின் அடியில் அல்லது வீட்டின் முன் வாசலில் இருந்து உள்ளே யாரும் வராது பாதுகாப்பதேயாகும். ஆகவே வெளியில் இருப்பவன் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை பார்க்கமுடியாது. ஆனால் கற்பனை வேறுவிதமாக இருக்கலாம்.

அந்தநிலை இந்த ராஜபக்சவின் வழிப்பரம்பரைக்குள் இருக்கும் ஏக்கம். சந்தர்ப்பம் கிடைத்தால் அதை செய்யவேண்டும். இதை செய்ய வேண்டும் என்ற வெறியில் வாழ்த்துவார்கள் என நாம் கருதலாம்.

இந்தவழியில் வந்த மகேந்திர ராஜபக்ச எந்த வழியிலாவது வெளியில் இருந்து பாதுகாப்பை விட்டு உள்ளே நுழைந்து அனுபவிக்க வேண்டும் என நினைத்து அதை அடைய அவர் எடுத்த வழிமுறைகள் என நாம் எடுத்துக்கொள்ளலாம். யார் அழிந்தாலும் அடைய வேண்டியதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணக்கரு அவர்களின் மனதில் வந்தது அதை அடைய இவர்களின் எட்டு சகோதரத்துவம் உதவியது என்பது பலமாக கருதலாம்.

அத்தோடு அவர் தூய பௌத்த மதத்துடன் வம்சம் ஆரம்பித்தாலும் ஆசை ,பேராசை என்று வரும் போது சில மாறுதல்கள் வருவது இயல்பே இந்த வழியில் இவரின் குடும்பத்தினர் பௌத்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் போர்த்துக்கேயரின் வருகை அவர்களின் கீ்ழ் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்களினால் பௌத்தத்தில் இருந்து மாறி கிருஸ்தவர்களுடன் இரண்டரை கலந்தார்கள் என்பதே உண்மையாகும்.

அதன்காரணமாகவே பெயர் மாற்றம் பதவிகள் என்றெல்லாம் இவர்களுக்குகிடைக்கப்பெற்றது. ஆகவே பேர்சி மகேந்திரராஜபக்ச என்ற நபர் பெளத்தம் ,கிருஸ்தவரின்கலப்பாகும்.
ஆனால் இவர் இன்று கூறும் சிங்கள பௌத்தம் இனவாதம் என்பவை இவருக்கு சம்பந்தம் இல்லாதிருக்கும் இருப்பினும் இவரின் நரித்தந்திரம் இன்று சிங்கள மக்களை வாட்டி வதைக்கின்றது.

இவரின் பலத்தை நாம் ஏன் இவ்வாறு எடுத்துக்கொள்ளக்கூடியது?

ராஜபக்ச பரம்பரைக்கு பாதுகாப்பாக இருந்த இவரின் முன்னோர்களின் எண்ணங்கள் ஏக்கங்களை நடைமுறைப்படுத்த தக்கதருணத்தை அவர்களினால் செய்யமுடியாத போதும் எட்டுப் பேரை பெற்ற இவர்களின் குடும்பத்தின் பின் ஓர் சக்தியை இவருக்கு பெற்று கொடுக்க பௌத்தமும், போர்த்துக்கீச மதமான கிறிஸ்தவ மதமும் இரண்டரை கலந்து பேர்சி மகேந்திர ராஜபக்ச, சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, சந்திரிக்கா, மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த அவரின் துணைவியாரான கிருஷாந்தி விக்ரமசிங்க உதவியுடன் இந்த நாட்டை ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டார்.(ரணிலும் இவரின் உறவினரே என்பது குறிப்பிடதக்கது)

இதை நிரந்தரப்படுத்தவே இன அழிப்பு, ஊழல், கொலை, கொள்ளை என்ற அடி மனதில் அவரின் முன்னோர்களுக்கு ஏற்பட்ட வேதனை எண்ணங்களை செயற்படுத்தும் ஓர் கருவியானார். இதற்காக சிலர் அழிக்க நினைத்த சமூகத்தினரின் சுயநல தலைமைகளையும் தன் வசப்படுத்தினார்.

அதன் மூலம் 10 ஆண்டுகளாக தமிழ் தலைமைகளின் உதவியோடு இந்த இனத்தின் விடுதலையாளர்களையும் இனத்தின் வம்சாவழியினரையும் அழித்து ஒழித்துக்கொண்டு அரசின் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தார்.

அதன் மூலம் தமிழினத்தின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் இது வட, கிழக்கு, மத்தி, தெற்கு) என்ற பேதமின்றி மக்களை விட்டு அரசியல் தலைமைகளை தன் அடிமைகளாக்கி அவர்களுக்கு வேண்டிய சகல வழங்களையும் கொடுத்து அவர்களின் மத்தியில் பிரிவு பேதங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக்கியதோடு அவர்களை மக்களுக்கு வழங்கும் அரச வசதிகளை அனுபவிக்க வழியும் வகுத்தார்.

அதேபோல் அரச சகல வழங்களையும் அடிமட்ட பிரச்சாரங்களுக்கும் மேல் மட்ட அரசியல் தலைமைகளின் சுய நலன்களுக்கும் பயன்படுத்தும் வழியை ஏற்படுத்தினார். இதனை அனுபவித்த வசதி படைத்தவர்களின் செயற்பாடுகளை ஐந்து மாத கால இடைவெளிக்குள் புதிய அரசால் எந்த விதத்திலும் மாற்றத்தையோ, விழிப்புணர்ச்சியையோ ஏற்படுத்த முடியாது.

சிங்கள பௌத்தம், இனவாதம், பணபலத்துடன் செயற்படும் அரசியலில் பயணிக்க எண்ணும் மகேந்திர ராஜபக்சவின் உண்மையான வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டுமாயின் இந்த அரசும் நேர்மையான அரசியல் தலைமைகளும் சிங்கள பௌத்தம், அரசியல் கொலை, இனவாதத்திற்கு எதிராக தங்களின் முழுக்கவனத்தையும் செயற்படுத்தி செயல்பட சிலகாலம் செல்ல வேண்டும்.

இதற்காக அரசு சகல வளத்தையும் பயன்படுத்தி கொலை, கொள்ளை, ஊழல், இனதுவேசத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் சகலரையும் உடன் தண்டிக்க வேண்டிய பாரிய பொறுப்பை செய்ய வேண்டும். செயற்படுத்த சிரமம் இல்லை. செயற்படுத்தும் போது நேர்மையாக இருப்பதாக கூறும் சிறுபான்மை தலைமைகளுக்கும் தண்டனை கிடைப்பது நிச்சயம்.

பதவியை பெறுவதற்காக அதுவும் சட்டத்தரணியாக வருவதற்கே மகிந்த தனது கிரிமினல் வேலையை செய்து சட்டத்தரணியானதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்திருக்கும் போது நாட்டின் தலைவராக வர அதை நிரந்தரமாக்க என்ன என்ன வித்தைகளை செய்தார் என்பது நமக்கு தெரிந்த விடயமாக இருக்கின்ற போதும் தற்பொழுது அவர் எடுத்து வரும் அருவருக்கதக்க விடயங்களை நாம் பார்க்கும் போது அவரின் பதவி அசை பலத்தை நிலைநாட்ட கையில் எடுத்துள்ள கீழ் கண்டவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. இனவாதம், சிங்கள பௌத்த வாதம்

2. அரசாண்ட கால பகுதியில் நாடாத்தியதாக சந்தேகிக்கப்படும் கொள்ளை, ஊழல், அதிகார துஸ்பிரயோகம்

3. தான் கொள்ளையடித்ததைப்போல் அமைச்சில் இருந்தவர்களையும் கொள்ளையடிக்க வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி ஆதாரங்களை கைவசம் வைத்துக்கொண்டு இருப்பது. தேவையானால் வெளியிடப்போவதாகஅரசுக்குள் இருக்கும் ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை பயமுறுத்திக்கொண்டிருப்பது

4. இன துவேசத்தை ஏற்படுத்த அமைத்த இயக்கங்களுக்கு நிதி வசதியளித்தது.

5.தகுதியற்ற இராணுவ காவல்துறையினருக்கு பதவி உயர்வை வழங்கி தனது பக்க சார்பாக நடக்க வைத்தது

6.பிரச்சாரத்தை நன்கு பயன்படுத்தி அடி மட்ட கிராமிய மக்களை கவர்ந்து கொண்டதை தக்க வைத்திருப்பது.

7.குடும்பத்தின் உள் பௌத்த கிருஸ்தவனாக இருந்தாலும் வெளியில் சிறந்த பௌத்த மதத்தை பின் பற்றுவது போல் நடிப்பது அதை மக்களை நம்பவைப்பது அதற்கான தேசிய உடைகளை அணிவது ( இது,பண்டார நாயக்க பிரேமதாச பாணியாகும்)

8.மக்கள் பணத்தை பல கோடி மில்லியன்களை தன் வசத்தில் வைத்து இப்பொழுது அந்த பணத்தை வைத்து பிரச்சாரங்களை நடாத்திவருவது.

9.அரச செயற்பாட்டு இயந்திரங்களில் தனது கால தகுதியற்ற உயர் அதிகாரிகள் தொடர்ந்தும் இப்பதவியில் இருப்பதை தனக்கு சாதகமாக்கி கொண்டிருப்பது.

11.பொலிஸ் இராணுவத்தில் தொடர்ந்து தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இப்போதும் இருப்பவர்களில் 80 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் ராஜபக்சவின் விசுவாசிகளாக இருப்பது.

12.சிறுபான்மை தலைமைகளில் பலரை தன் கட்டுப்பாட்டில் இன்றும் வைத்திருப்பது போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.

இவைகளே ராஜபக்சவின் பலமாக இருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் அரசு கவனம் செலுத்தாதவரை ராஜபக்ச தனது பதவி ஆசையை நிறைவேற்ற எதையும் செய்வார் என்பது உறுதியாக நாம் எண்ணலாம்.

மகா.

0 Responses to மகிந்தவின் பலத்தை தகர்க்க செயல்படுமா அரசு? - மகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com