பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவை கொண்டாடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாஜக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதுக் குறித்து தமது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆலோசனையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, அருண்ஜெட்லி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஓராண்டு நிறைவுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியை நல்ல முறையில் நடத்துவது எப்படி என்று ஆலோசித்ததாகவும் தெரிய வருகிறது.அதோடு ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றும் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகளும் அங்கங்கு பாஜகவின் ஓராண்டு ஆட்சிக் காலத்தை பிரமாண்டமாகக் கொண்டாடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவை கொண்டாடுவது குறித்து பிரதமர் ஆலோசனை!