Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள கார்லேண்ட் அருங்காட்சியகத்தில் முஹமது நபி தொடர்பான கார்ட்டூன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த இரு மர்ம நபர்கள் அரங்குக்கு வெளியே பாதுகாவலர் மீது நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ISIS போராளிக் குழு இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இதை விட மோசமான தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழ்த்தப் படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப் பட்ட இரு மர்ம நபர்களும் தமது அல் ஃகிலாஃபா துருப்புக்கள் (Al Khilafa) என ISIS தனது உத்தியோக பூர்வ ரேடியோ சேனலில் தெரிவித்திருந்த போதும் இவர்கள் தமது குழுவுடன் தொடர்புடையவர்கள் தான் என்பதற்கான உறுதியான எந்த சான்றையும் அது வெளிப்படுத்தவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய இருவரும் எல்டொன் சிம்ப்சன் மற்றும் நாடிர் சூஃபி என போலிசார் அடையாளப் படுத்தி அவர்களது புகைப் படங்களையும் ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் ஃபோனிக்ஸில் வசித்து வந்த இவர்கள் இருவரும் ISIS இன் உத்தரவு இல்லாமலேயே குறித்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கவும் வாய்ப்பு உள்ளது என முன்னால் FBI ஏஜண்டான டிம் க்லெமெண்டே தெரிவித்துள்ளார்.

நேரடி உத்தரவு இல்லா விட்டாலும் ஈ மெயில் மூலமாக ISIS உடன் இவர்கள் தகவல் பரிமாறி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் க்லெமெண்டே குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த தாக்குதலை நிகழ்த்த சில நிமிடங்களுக்கு முன்னர் சிம்ப்சன் டுவிட்டரில் #texasattack என்று கணக்குத் திறந்து அதில் அல்லாஹ் எங்களை முஜாஹிடீனாக ஏற்றுக் கொள்வானாக! என டுவீட் செய்ததாகவும் பின்னர் இந்தக் கணக்கு டுவிட்டரால் மூடப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடையதா என அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 Responses to டெக்ஸாஸ் முஹமது நபி பற்றிய கார்ட்டூன் போட்டியின் போதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்றது ISIS

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com