இன்று செவ்வாய்க்கிழமை சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவினை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி திடீரென வந்தடைந்துள்ளார்.
இதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு முதலில் பயணித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராக கெர்ரி பெயர் பெற்றுள்ளார். மேலும் சோமாலியாவில் இவர் கழிக்கவுள்ள தினங்களில் அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷெயிக் மொஹமுட் உட்பட பல உக்கிய சோமாலித் தலைவர்களைச் சந்திக்கவும் உள்ளார்.
இதற்கு முன் சோமாலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குறைந்தது 20 வருடங்களாக அதே நேரம் மிகக் குழப்பமான வரலாறே நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெப்ரவரியில் தான் அதிபர் ஒபாமா சோமாலியாவுக்கான தனது முதற் தூதராக கத்தெரீன் எஸ். தனனி என்பவரை நியமித்தார். ஆனால் அமெரிக்க இராணுவத்தின் முக்கிய தளபதிகளும் வீரர்களும் பல வருடங்களாக சோமாலியாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சோமாலியாவில் அல்ஷபாப் தீவிரவாதிகளின் கை ஓங்காமல் இருப்பதற்கும் மேற்குலக நாடுகள் முயற்சி செய்த வண்ணமுள்ளன.

0 Responses to சோமாலியாவுக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோன் கெர்ரி