இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிடித்துத் தரும் நபர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப் போவதாக பாகிஸ்தானின் ஜமாத் இ- இஸ்லாமி என்கிற கட்சியின் தலைவர் சிராஜ் அல் ஹக் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடின கொள்கை கொண்ட ஜமாத் இ- இஸ்லாமி கட்சி தலைவர் அல் ஹக், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியான ராவல்கோட்டில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசினார். அவரது பேச்சில், மோடியையும், இந்திய அரசையும் கடுமையாக சாடியதுடன், பாகிஸ்தான் அரசியல் அமைப்பினரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் அல் ஹக் பேசியதாவது, “ இந்திய பிரதமர் மோடிக்கும், அவரது ஏஜன்டுகளுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் எங்களின் ஜிகாதிகளை உங்களால் பிடிக்க முடியாது. ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான சையீது சலாவுதீனை கைது செய்ய மோடி அரசு ரூ. 50 கோடி வெகுமதி அறிவித்துள்ளது. நான் சொல்கிறேன். இது நடக்காது. மோடியை பிடித்து வரும் நபர்களுக்கு நான் அறிவிக்கிறேன் 100 கோடி . எங்கள் இயக்கம் வழங்கும்.” என்றுள்ளார்.

0 Responses to மோடியை பிடித்து தரும் நபர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு: பாகிஸ்தான் கட்சி அறிவிப்பு!