கடந்த சில வருடங்களாக வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுப் போர், பஞ்சம் மற்றும் இன்ன பிற காரணிகளால் ஆயிரக் கணக்கான மக்கள் அங்கிருந்து அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் புகுவதற்கென மத்திய தரைக் கடல் வாயிலாக சிறிய தரம் குறைந்த படகுகளில் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதில் பலர் நடுக்கடலில் படகு கவிழ்தல் மற்றும் ஏஜண்டுக்களால் கைவிடப் பட்டு பல நாட்களாக உணவு நீர் கிடைக்காமை போன்ற காரணங்களால் ஆயிரக் கணக்கில் மடிந்தும் வருகின்றனர். நிகழ்கால உலகில் மிகப்பெரிய அகதிகள் அவலமாக மாறியிருக்கும் இவ்விவகாரத்தால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் தஞ்சக் கொள்கைகளில் பாரிய அழுத்தம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மையில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சில கப்பல்கள் லிபியக் கடற்கரைக்கு அண்மையில் மத்திய தரைக் கடலில் படகுகளில் தத்தளித்து வந்த குறைந்தது 3500 அகதிகளைத் தாம் மீட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்துத் தகவல் அளித்த இத்தாலியக் கடற்படை, ஒரு தனியார் கப்பல் உட்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதாகக் கூறியதுடன் ஐ.நா அகதிகள் பிரிவின் பேச்சாளர் வில்லியம் ஸ்பிண்ட்லெர் தகவல் படி சனிக்கிழமை காலை குறித்த அகதிகள் படகுகளில் இருந்து கிடைத்த அபாய அழைப்புக்களை அடுத்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. எனினும் காப்பாற்றப் பட்ட 3480 அகதிகளைத் தவிர வேறு எவரேனும் ஆபத்தில் சிக்கியுள்ளனரா என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை. ஆனால் வானிலையும் கடல் அலைகளும் சாதகமாகவே உள்ளதாகவும் இதுவரை ஏதும் விபத்துக்கள் ஏற்பட்டதாகவோ அல்லது எவரேனும் இறந்ததாகவோ அல்லது காணாமற் போனதாகவோ தகவல் கிடைக்கவில்லை என்றும் ஸ்பிண்ட்லேர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் முக்கியமாக இத்தாலி, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் ஈடுபட்டிருந்தன. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தான் பிரிட்டனின் எஸ்ஸெக்ஸ் இலுள்ள துறைமுகம் ஒன்றில் வைத்து நெதர்லாந்தில் இருந்து கண்டெயினர் ஒன்றில் மறைந்து வந்த 15 சிறுவர்கள் உட்பட சுமார் 68 பேரை பிரிட்டன் எல்லைப் படையினர் கண்டு பிடித்திருந்தனர். இதில் இரு கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவதாகவும் தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய தரைக் கடலில் தத்தளித்த 3500 அகதிகளை மீட்ட ஐரோப்பியக் கப்பல்கள்!