Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களைச் செய்ய கட்சியின் தலைவர் என்கிற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

அதன்பிரகாரம், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அநுர பிரியதர்ஷன யாப்பா நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுபோல, தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டு, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியடைந்துள்ளார். இதனாலேயே கட்சி பதவிகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் சுசில் பிரேமஜயந்த நீக்கப்படலாம் என்றும், அந்தப் பதவிக்கு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்படலாம் என்றும் தென்னிலங்கைச் செய்திகள் கூறுகின்றன.

தமது பதவிகள் பறிக்கப்படும் பட்சத்தில், அநுர பிரியதர்ஷன யாப்பாவும், சுசில் பிரேமஜயந்தவும் மேலும் சில சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரோடு இணையும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சுதந்திரக் கட்சி பதவிகளில் மாற்றம்: அநுர, சுசில் பதவியிழக்கின்றனர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com