Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் எனும் போர்வையில் பலவந்தமாக காணிகளை கைப்பற்றல் மற்றும் மக்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

காணிகள் கைப்பற்றப்படும் அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளக்கூடிய மனிதாபிமான பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி காணிகளை கைப்பற்றியுள்ளதுடன் அதற்கான நட்டஈடுகளும் உரிய வகையில் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையில் அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது உரிய விதிமுறைகளுடன் கூடிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்த வேண்டும் என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கொழும்பில் பலவந்தமாக காணி கைப்பற்றுதல் மற்றும் மக்களை அகற்றுதலுக்கு தடை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com