Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு முழுவதும் ஆதி திராவிடர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். என குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி இது தொடர்பில் அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரியவருவதாவது.

ராஜஸ்தான் மாநிலம் நகோர் மாவட்டத்தில், ஆதி திராவிடர்கள், டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். நீண்ட கால நிலப்பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. அதே மாவட்டத்தில், 3 மாதங்களுக்கு முன்பு, 3 ஆதிதிராவிடர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

ராஜஸ்தானில் மட்டும் இதுபோன்று நடக்கவில்லை. மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில், ஆதி திராவிட இளைஞர் ஒருவர், அம்பேத்கர் பற்றிய ரிங்டோனை வைத்திருந்ததற்காக காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல்கள் பற்றி நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆதி திராவிடர்களின் நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் பொறுப்பான அரசு எந்திரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம், ஆதிதிராவிடர்கள் அனைவரும் நீதியை உரிமையுடன் பெற இயலும்.

மசோதா கொண்டு வாருங்கள் அந்த நோக்கத்தில்தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ‘எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம்–1989’ என்ற சட்டத்தின் அமலாக்கத்தை பலப்படுத்த ஓர் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை நிலைக்குழுவுக்கு அனுப்பி, அந்த அவசர சட்டத்தை தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, காலாவதி ஆக செய்து விட்டது.

கடந்த டிசம்பர் மாதம், நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இருப்பினும், பட்ஜெட் கூட்டத்தொடரில், அதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. எனவே, அடுத்த மாதம் தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மேற்கண்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றுமாறு தங்களை வற்புறுத்துகிறேன் என்று  சோனியா காந்தி கூறியுள்ளார்.

0 Responses to ஆதி திராவிடர் மீதான தாக்குதல் பிரதமருக்கு சோனியா கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com