Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹற்றன் நகரில் திடீர் சுற்றிவளைப்பு

பதிந்தவர்: தம்பியன் 29 June 2015

ஹற்றன் நகரத்தில் உணவகங்கள், விடுதிகள், பேக்கரி மற்றும் புட் சிட்டி, சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்களை பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் திடீரென சுற்றிவளைத்தனர்.

பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் ஹற்றன் நகரத்தில் உள்ள வியாபார ஸ்தலங்களை இன்று சோதனைக்குட்படுத்தும் போது பதிவு செய்யப்படாத தண்ணீர  போத்தல்கள், காலவதியான குளிர்பான போத்தல்கள், பழுதடைந்த மரக்கறி வகைகள் பல உணவு பண்டங்கள் மற்றும் பாவனைக்குதவாத தேயிலை தூள் என அத்தனையும் கைப்பற்றினர்.

இதன்போது பாவனைக்குதவாத மற்றும் அசுத்தமான முறையில் காணப்பட்ட சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்களுக்கும், உணவகங்கள், விடுதிகள், பேக்கரி போன்றவைக்கு எதிராக ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்ததோடு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

0 Responses to ஹற்றன் நகரில் திடீர் சுற்றிவளைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com