நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உச்சபட்ச உதவிகளைப் புரிவேன். ஆனால், பதவிகளுக்காக ஆசைப்படவோ, போட்டியிடவோ மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த அவர், ஊடகங்களிடம் பேசினார் அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளதாவது, “எனது அரசியல் வாழ்க்கையில் நான் எவ்வளவோ பணம் பொருட்களை செலவழித்துள்ளேன். நான் இருந்ததை அழித்துள்ளேனே தவிர சம்பாதிக்கவில்லை.
நான் மனிதப் படுகொலையிலேயே வெள்ளைவான் சம்பவங்களிலோ அல்லது வேறெதும் ஊழல் மோசடிகளிலோ ஒருபோதும் ஈடுபடவில்லை. அதனால் எனக்கு பதவிக்கு வருவதற்கு எந்த ஆசையும் கிடையாது. இவ்வாறான ஊழல் மோசடிகளை மறைப்பதற்கும், அதனை மூடிவிடுவதற்காகவே சிலர் பதவி மோகம் கொண்டு மீண்டும் பதவிக்கு வர எத்தனிக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக போட்டியிட மாட்டேன்: சந்திரிக்கா