Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் கல்விக் கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதனை ஊக்குவிப்பது போன்று இனங்களுக்கிடையே நல்லுறவினை விருத்தி செய்யும் அடிப்படை தேவையான தொடர்பு சாதன திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் மொழிப் பாடங்களை கற்பிப்பதும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் தேசிய கல்வி ஆணைக்குழு சபையின் உத்தியோகத்தர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியும் கற்பிப்பதில் தற்போதைய நிலைமையைவிட மேலும் பலமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to தேசிய- சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com