Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தற்போது சிறைகளில் இடமிருக்காது என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தற்போதுள்ள பாராளுமன்றத்தில் 42 ஆசனங்களையே கொண்டுள்ளார். அப்படியான நிலையில், எதிர்வரும் தேர்தலை அவரினால் எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பது மக்களின் கேள்வியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வித்தியாசமான வழிகளிலேயே பதவிகளுக்கு வந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் யாருக்கும் நிம்மதி இருக்கவில்லை. அவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பல தடவைகள் நழுவிச்சென்றுள்ளன. அவ்வாறு கிடைத்திருந்தால், அவர் எல்லோரையும் சிறையில் அடைத்திருப்பார்.

மக்கள் இன்று விரக்தி மனப்பாங்கில் உள்ளனர். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. அரசாங்கம் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட, அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றது.

அரசியலுக்காக தங்களின் இருக்கைகளை காப்பாற்றிக்கொள்வதற்காகவே இன்று அநேகமான அரசியில்வாதிகள் யதார்த்தை மறந்து செல்கின்றனர். இன்றுள்ள அரசியல் கொந்தளிப்பில் சரியான முடிவை எடுப்பதற்கான ஒரு சூழ்நிலை எமக்கு கிடைக்கும் வரையில் காத்துக்கொண்டிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் சிறைகளில் இடமிருக்காது: ஏ.எல்.எம்.அதாவுல்லா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com