Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள சிறுகட்சிகள், அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு முறை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை 18 சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகள் கூடி ஆராய்ந்தன. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட மேலும் பல சிறிய கட்சிகள் கலந்துகொண்டன.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறு கட்சிகளின் பிரதிநிதிகள், "அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20வது திருத்தச்சட்டம் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரம்பத்தில் இருந்து சிறுபான்மை கட்சிகளுடன் கூடித் தீர்மானித்த தேர்தல் முறைமையை சமர்ப்பிக்கவில்லை. அதனை மூடி மறைத்து விட்டு புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர். இதற்கு ஒருபோதும் சிறுபான்மைக் கட்சிகள் இடமளிக்கப் போவதில்லை.

எனவே, புதிய தேர்தல் முறைமையில் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த இரண்டு வாக்குகளையும் அவர்கள் விரும்பும் கட்சிக்கும், விரும்பும் நபருக்கும் அளிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி நிறைவேற்றப்பட்ட அறிகையின் பிரதிகள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும்.” என்றுள்ளனர்.

0 Responses to புதிய தேர்தல் சீர்திருத்தத்தை ஏற்க முடியாது; இரட்டை வாக்குச்சீட்டு அவசியம்: சிறுகட்சிகள் கூட்டாக கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com