தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு, இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர், எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஐ விட அதிகாரிக்காது என்றும் கூறியுள்ளார்.
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, 20வது திருத்தம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இது தொடர்பான சகல முரண்பாடுகளுக்கும் இன்று இறுதி முடிவு எட்டப்படும். சிறுபான்மை கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதால் தமது உரிமைகள் குறித்து இங்கு பேச வாய்ப்பு இருக்கிறது.
சிறுபான்மை கட்சிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 225 ஆக பேணுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியில் முடிவு செய்துள்ளது.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 25 பேர் தேசிய பட்டியலினூடாக தெரிவு செய்யப்படுவர். ஏனைய 200 பேரும் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையின் கீழ் தெரிவாவர். 19வது திருத்தத்தை நிறைவேற்றியது போன்று இதனையும் நிறைவேற்றுவோம். 19வது திருத்தம் மற்றவரது அதிகாரத்தை குறைப்பதாகும். 20வது திருத்தம் தமது அதிகாரத்தைக் குறைப்பது, அதனால் இதனை எதிர்க்கின்றனர்.
20வது திருத்தத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அவசரம் எமக்கு கிடையாது. ஜனாதிபதியே அது குறித்து முடிவு செய்வார்.” என்றுள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று!