வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், “இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொருவரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களாக செயற்பட வேண்டும்.
இலங்கை பற்றிய உண்மைத் தகவல்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் அதேவேளை கடல் கடந்து வாழும் ஒன்றரை மில்லியன் இலங்கையர்களை ஒன்றிணைத்து தாய் நாட்டில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர் முன்னெடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to புலம்பெயர் இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை ஆரம்பம்!