அரசியல் கட்சிகளின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம் பொது மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றும் போது அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மற்றும் மாகாண மட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “மாகாண மட்டத்தில் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, 28 வருடங்களாக நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமையின் பயன்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளது.
சிறந்த செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மாகாண சபைகள் கவனம் செலுத்த வேண்டும். மாகாண சபைகள் எப்போதுமே தம்மிடமுள்ள அதிகாரங்கள் பற்றியே கவனத்திற் கொள்கின்றன. எனினும், தம் வசமுள்ள அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தி சாத்தியமாகவும் பயனுள்ளதாகவும் மக்கள் சேவையை பெற்றுக் கொடுக்க அர்ப்பணிக்க வேண்டும்.
அத்துடன் மாகாண சபையோ அல்லது பாராளுமன்றமோ மக்களின் நிதியை செலவு செய்யும் சகல சந்தர்ப்பங்களிலும் வீண் விரயம் மற்றும் ஊழல்கள் இடம்பெறுவதைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றுள்ளார்.
இந்த மாநாட்டின் போது, மாகாண ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அபிவிருத்தியின் போதான பொறுப்புகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அறிக்கையாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

0 Responses to மக்களுக்கான சேவையில் சகல கட்சிகளின் இணக்கப்பாடும் அவசியம்: ஜனாதிபதி