Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக துண்டாட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

எத்தகைய தரப்பினருடன் இணைந்தாவது சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உடைக்கும் நோக்குடன் சந்திரிக்கா குமாரதுங்க செயற்படுவது, அவரின் செயற்பாடு மற்றும் பேச்சின் மூலம் உறுதியாவதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிடிய அபயாராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “அரச தலைவரொருவர் தனது ஓய்வின் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் இருந்து சந்திரிக்கா குமாரதுங்க கற்றுக்கொள்ள வேண்டும். தன்னை நிர்வாணமாக்கி நடக்க வைக்கவுள்ளதாக கூறிய நபர்களுடன் சந்திரிகா இணைந்து செயற்படுகிறார். மஹிந்த ராஜபக்ஷ மீதும் கட்சி மீதும் அவர் கொண்டுள்ள குரோதம் இதனூடாக தெளிவாகிறது.

அரசாங்கத்தின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் பல இலட்சம் மக்கள் மாத்தறையில் நடந்த கூட்டத்தில் பங்குபற்றினார்கள். இது இலங்கை வரலாற்றில் பாரிய கூட்டமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்குவதற்காக ‘நில்வளா போராட்டம்’ என பெயரில் நடத்திய இந்த கூட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. எமது கட்அவுட் கொடி என்பன கிழிக்கப்பட்டன. பல்வேறு இடையூறுகள் மாத்தறை கூட்டத்துக்கு செய்யப்பட்டன.

தினேஷ், வாசு, விமல், கம்மம்பில ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உடைப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள் சுதந்திரக் கட்சியை பாதுகாக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கவுமே செயற்படுகின்றனர்.

அமைச்சர் பதவிக்காக யாராவது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையொப்பத்தை வாபஸ்பெற முயல்வதானால் அதுவே மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தாமதப்படுத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியை துண்டாட வேண்டாம்: சந்திரிக்காவிடம் டலஸ் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com