உள்ளகப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பொறுப்புகூறுவதுடன், நல்லிணக்கத்திற்கான உள்ளகப் பொறிமுறையையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக ஏற்படுத்தப்படவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 29வது அமர்வை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே சையத் அல் ஹூசைன் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் புதிய அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தை நிறைவேற்றியுள்ளது, அதனை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தினால், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்தும்.
செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்திற்காக நம்பகத்தன்மை மிகுந்த உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான வெளிப்படையான - அனைவரையும் உள்வாங்கும் செயற்பாடுகள் குறித்து எனது அலுவலகம் இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொள்ளும்.
சகல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிக்குமாறும், இலங்கை அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளகப் பொறிமுறை உருவாக்கத்தில் அனைத்து தரப்பினரையும் உள்வாங்குக: சையத் அல் ஹூசைன்