புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரையும் 30 நாட்கள் பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஊர்காவற்றுறை நீதவான் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமையவே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை யூலை மாதம் 13ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பில் வித்தியாவின் தாய், சகோதரன், ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சாட்சியம் அளித்தனர். அத்துடன் வழக்கு தொடர்பான தடையப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. அந்த பொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய், அண்ணன் மயங்கி விழுந்தனர் (படங்கள் இணைப்பு)
மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்: சிங்களவர் மூவர் களத்தில்! (படங்கள் இணைப்பு)

0 Responses to வித்தியா படுகொலைச் சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!