மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை பிரேரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ள நிலையிலேயே, மூன்றாவது அணியில் களமிறங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஆர்வத்தோடு செயற்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பலரையும் மூன்றாவது அணியில் இணைத்துக்கொள்ளும் நோக்கத்திலான இரகசிய பேச்சுவார்த்தையொன்று அண்மையில் மாத்தறையில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்ஷவோடு, கோத்தபாய ராஜபக்ஷவும் தலைமை வகிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மஹிந்த – கோத்தபாய தலைமையில் மூன்றாவது அணி!