சிறைக்குள்ளிருக்கும் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளன் சிறைக்குள்ளேயே மியூசிக் கற்றுக் கொண்டிருக்கிறாராம். முறைப்படி சங்கீதமும் கற்று இருக்கிறாராம். அவரை சிறைக்குள் இருந்தபடியே பாட வைத்துவிட வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறார் ஒரு இசையமைப்பாளர். சிலமுறை பேரறிவாளனை மனு போட்டு சிறையில் சென்று பார்த்தும் வந்திருக்கிறார். ‘என் பேரு இப்போதைக்கு வேணாம். விரைவில் பேரறிவாளனை ஒரு படத்தில் பாட வைக்கலேன்னா பாருங்க’ என்று சவாலும் விடுகிறார்.
ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால், சிறைக்குள்ளிருந்தபடியே அவர் போடும் ட்யூன்களுக்கு வெளியே கம்போஸ் செய்து, ‘இசை-பேரறிவாளன்’ என்று டைட்டிலில் போடவும் தயாராகி வருகிறார் இவர். ஒரு தூக்கு தண்டனை கைதி இந்தளவுக்கு ஆர்வத்தோடு இருக்கிறாரே, அவரை பாராட்டுவதா? பெரும் முயற்சி செய்து அவரை சம்மதிக்க வைத்திருக்கும் இந்த இசையமைப்பாளரை பாராட்டுவதா?

0 Responses to பாட வருகிறார் பேரறிவாளன்