Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணா குழுவினரால் கிழக்கு மாகாணத்தில் சமுக சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சமுக சேவையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மண்டூரில் வைத்து சமுக செயற்பாட்டாளர் மதிசயன் சச்சிதாநந்தம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரின் கொலைக்கு பின்புலத்திலும், கருணாவின் குழுவினரே செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டூருக்கு அருகில் உள்ள ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டு வரும் மைதானம் ஒன்றுக்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகளை கருணா குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to கருணா குழுவினரால் கிழக்கு சமுக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com