Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பராக் ஒபாமா இலங்கை வரும் சாத்தியம்!

பதிந்தவர்: தம்பியன் 02 June 2015

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.

இதனிடையே, இலங்கை அரச தலைவரொருவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இலங்கை அரசாங்கம், ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தததை உறுதி செய்திருந்தார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில், அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட பின்னர், பலவீனமாக இருந்த இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு சீரடைந்ததுள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பராக் ஒபாமா இலங்கை வரும் சாத்தியம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com