Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னிலங்கையையும், மலையகத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ் முற்போக்குக் கூட்டணி’ தமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நோக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் 15 இலட்சம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கிலும், அவர்களுக்காக அரசியல் மட்டத்தில் குரல் எழுப்புவதற்காகவும் மூன்று தமிழ்க் கட்சிகள் இணைந்து, 'தமிழ் முற்போக்குக் கூட்டணி' எனும் அரசியல் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அரசியல் பிரிவுத் தலைவராகச் செயற்படும் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன இதில் அங்கம் வகிக்கின்றன. எதிர்காலத்தில் மேலும் சில அமைப்புகள் இந்தக் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தமது நோக்கங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்தவுள்ளோம் என்று முற்போக்கு தமிழ்க் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காக இணைந்து குரல் எழுப்புதல், தமிழ்பேசும் மக்களின் நியாயமான உரிமைகள் பற்றி சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மேற்படி சந்திப்புகளின்போது கலந்துரையாடப்படலாம் என்று தெரிகிறது.

0 Responses to தமிழ் முற்போக்குக் கூட்டணி விரைவில் த.தே.கூ, மு.கா.வுடன் பேச்சு: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com