Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காடழிப்பைத் தடுப்பதற்கும், வனங்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சுற்றாடல் சமநிலையை பேணுவதற்கும் புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களை தராதரம் பாராது, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சூழலையும், உயிர்களையும் நேசிக்கும் பரம்பரையை உருவாக்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சூழலை பாதுகாத்து, சிறப்பான நாளையை உருவாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to சுற்றாடல் சமநிலையைப் பேணுவதற்கு புதிய சட்டங்கள்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com