Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் இன்று புதன்கிழமை (யூன் 24) நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செப்டம்பர் மாதத்தில் புதிய பாராளுமன்றத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானத்தோடு இருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தைக் கலைக்க தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பிரகாரம், வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் 20வது திருத்தம் மீதான ஒத்திவைப்பு விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. அது, இன்றும் தொடரும். இந்த நிலையிலேயே, இன்று விவாதங்கள் முடிவடைந்ததும் நள்ளிரவோடு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு; ஒகஸ்ட் மாத இறுதியில் தேர்தல்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com